உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி 

கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி 

ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே மணி நகர் பகுதியில் டூவீலர் மீது கார் மோதியதில் டூவீலரை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவர் பலியானார்.ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் ராஜேஸ்குமார் 35. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு ராஜேஸ்குமாரும், நாடார்வலசை நாகபாண்டி மகன் அழகுநாதனும் சேர்ந்து அழகுநாதன் அக்காள் டூவீலரில் ராமநாதபுரம் வந்தனர்.ஆட்டோமொபைல் கடையில் ராஜேஸ்குமார் ஆட்டோவிற்கு உதிரி பாகம் வாங்கிக் கொண்டு திரும்பினர். டூவீலரை ராஜேஸ்குமார் ஓட்டினார். மணிநகர் பகுதியில் முத்துப்பேட்டை சண்முகவேல் மகன் ராஜ்குமார் ஓட்டி வந்த கார் டூவீலரில் மோதியது. இதில் காயமடைந்த ராஜேஸ்குமார், அழகுநாதனை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ராஜேஸ்குமார் உயிரிழந்ததாக தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ