ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கணேஷ்பாபு கூறியதாவது: ஆட்டோ எப்.சி., கட்டணம் ரூ.700 இருந்த நிலையில் தற்போது ரூ.9100 வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தற்போது வரை உயர்த்தவில்லை. இந்நிலையில் பைக் டாக்சி, மினி பஸ் உள்ளிட்டவற்றால் ஆட்டோ தொழில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். தனியார் செயலிகளுக்கு அதிக கமிஷன் செலுத்த வேண்டியுள்ளது. தமிழக அரசு ஆட்டோ செயலியை கொண்டு வர வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் என்றார். ஆட்டோ சம்மேளன பொதுச் செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.