உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் சங்கரா கண் மருத்துவமனை, டாட்டா கேபிடல் இணைந்து உலக குளோக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை டி.எஸ்.பி., சண்முகம் துவக்கி வைத்தார். காந்தி சிலையில் துவங்கி பஜார், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உட்பட முக்கிய வீதிகள் வழியாக சங்கரா மிஷன் சென்டர் வரை குளோக்கோமா நோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பொதுமக்கள் குளோக்கோமாவை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உடன் சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள், நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !