மேலும் செய்திகள்
மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு
12-Oct-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. பொதுமக்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை, காஸ் சிலிண்டர், மின்சார தீ விபத்து, எலக்ட்ரிக் பைக் மற்றும் கார்களை கையாளும் முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தீபாவளி வரவுள்ள நிலையில் பட்டாசை வெடிக்கும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா கூறியதாவது: விபத்தில்லா தீபாவளியை கொண்டாடவலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் அருகில் இருக்கவேண்டும். காட்டன் துணி அணிந் திருக்க வேண்டும். குடியிருப்பு, மருத்துவமனை அருகே வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் வெடிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. விபத்து ஏற்பட்டால் உடனே 112, 108, 101 எனும் உதவி எண்ணை அணுகி தாங்கள் இருக்கும் முகவரியை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றார்.
12-Oct-2025