உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் பாலிதீன் ஒழிப்பு குறித்து ரோட்டரி சங்கத்தினர் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பையை சேகரித்தனர். தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் பாலிதீன் பை, பிளாஸ்டிக் பாட்டிலை வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதித்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ராமேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாலிதீன் பைகளால ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு துணிப் பைகள் வழங்கினர். இதில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க கவர்னர் காந்தி, துணை கவர்னர் கார்த்திகேயன், முன்னாள் துணை கவர்னர் நாகராஜன், ராமேஸ்வரம் ரோட்டரி சங்க தலைவர் ரோஜர், செயலாளர் பாலசுப்பிரமணி, 2026--27க்கான ரோட்டரி சங்க தலைவர் அரவிந்த், முன்னாள் தலைவர் முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை