மேலும் செய்திகள்
துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
08-Oct-2026
கமுதி: கமுதியில் சங்கரா கண் மருத்துவமனை, டைட்டன் கம்பெனி இணைந்து உலக பார்வையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் துவக்கி வைத்தார். கமுதி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஜார் வழியாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தனர். கண் பார்வையின் பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள், நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
08-Oct-2026