விழிப்புணர்வு கருத்தரங்கம்
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் ரவி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப் பட்டது. போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து விளக்க படங்களுடன் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ரியாஸ் கான், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை போதைப் பொருள் ஒழிப்பு கிளப் பொறுப்பாளர் ஆசிரியர் முத்துக்குமார் செய்திருந்தார்.