மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம்
18-Nov-2024
பரமக்குடி: பரமக்குடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, போக்குவரத்து துறை இணைந்து பாலினம் அடிப்படையிலான வன்முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் நிகழ்ச்சி நடந்தது.பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர் வசந்தகுமாரி, சைல்ட் லைன் பணியாளர் கவிதா முன்னிலை வகித்தனர். நவ.25 முதல் டிச.10 வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்படி பாலின வேறுபாடு, பாலின பாகுபாடு மற்றும் சமத்துவம், பயணங்களின் போது பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் உட்பட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து பரமக்குடி பஸ் ஸ்டாண்ட், ஐந்து முனை ரோடு, அரசு கலைக்கல்லுாரி அருகில் நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், கல்லுாரி மாணவிகள் பார்வையிட்டனர்.
18-Nov-2024