உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு பயிற்சி முகாம்

விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஊராட்சி அழியாதான் மொழி கிராமத்தில் நெற்பயிருக்கு அடுத்து விவசாயிகள் வேளாண் நிலங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், பயிர்களுக்கு ஏற்ற சமச்சீர் உர மேலாண்மை மூலம் ரசாயன உர பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றார். உதவி வேளாண் அலுவலர் ரிஷி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகானந்தம், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ