உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அய்யனார் கருப்பண்ணசுவாமி கோயில் குதிரை எடுப்பு விழா

அய்யனார் கருப்பண்ணசுவாமி கோயில் குதிரை எடுப்பு விழா

கமுதி: கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் அய்யனார் கருப்பண்ணசுவாமி குதிரை எடுப்பு விழா, அரியநாச்சியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு காத்தனேந்தல் கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது.சுடு மண்ணால் செய்யப்பட்ட குதிரை, தவழும் பிள்ளைகள், பைரவர், கருப்புசுவாமி, மாரியம்மன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் 10 கி.மீ., ஊர்வலமாக துாக்கி வந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், வேல்குத்தி வந்தனர். பின் அய்யனார் கோயிலில் வைத்து விளைந்த தானியங்களை வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அரியநாச்சியம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை