உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அய்யனார் கோயில் திருவிழா

அய்யனார் கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை மங்களநாதன் குளம் அருகே ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது. எல்லை காக்கும் அய்யனராக இப்பகுதி மக்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. பூரண, புஷ்கர தேவியர்களுடன் அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் இருந்தார்.சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் எருதுகட்டு நிகழ்ச்சியும், இரவில் சுவாமி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ