உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் சீதா தீர்த்தத்தில் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

ராமேஸ்வரம் சீதா தீர்த்தத்தில் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு சொந்தமான சீதா தீர்த்தம் கிணற்றில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால், தீர்த்தம் மாசுபட்டு உள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சீதா தீர்த்தம் கிணறு ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடிய நிலையில் வாகன விபத்து ஏற்பட்டதால் இங்கு குளிப்பதை கோயில் நிர்வாகம் தடுத்தது. இதனால் தீர்த்த கிணற்றை சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பினர்.ஆனால் தீர்த்தத்தை கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் தீர்த்த கிணற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை குவிந்து கிடந்தது. இதனால் தீர்த்தம் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே தீர்த்தத்தை பராமரிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி