சமச்சீர் உர பயன்பாடு பயிற்சி
பரமக்குடி:பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நடந்தது. அப்போது முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உர பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பரமக்குடி வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யும் முன் பரிசோதனை அடிப் படையில் உரமிட்டால் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுவதால் மண்வளம் மேம்படும் என்றார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் சீதாலட்சுமி, பரமக்குடி வேளாண் அலுவலர் கார்த்திகேயன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பேசினார். மாவட்ட அளவில் விவசாயிகள் பங்கேற்றனர்.