உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேனர்: உயிருக்கு உத்தரவாதம் இல்லை: * தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் * பள்ளங்களால் விபத்துகள் அதிகரிப்பு

பேனர்: உயிருக்கு உத்தரவாதம் இல்லை: * தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் * பள்ளங்களால் விபத்துகள் அதிகரிப்பு

தொண்டி,: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பள்ளங்கள், சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்து அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வழியாக செல்கிறது. கன்னியாகுமரி-சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக இச் சாலை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. பாசிபட்டினம், தீர்த்தான்டதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் நடுவே அதிகமான பள்ளங்கள் உள்ளன. இதனால் விபத்து பலி அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சோழகன்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் எஸ்.பி.பட்டினத்திலிருந்து தொண்டியை நோக்கி டூவீலரில் செல்லும் போது தீர்த்தாண்டதானம் அருகே பள்ளம் இருப்பதை பார்த்து திடிரென்று 'பிரேக்' போட்டு திரும்யபோது பின்னால் வந்த கார் மோதியதில் அதே இடத்தில் பலியானார். இதே போல் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. தொண்டி மக்கள் நலப்பணிக் குழு சிக்கந்தர் கூறியதாவது: தொண்டி முதல் எஸ்.பி.பட்டினம் வரை இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. இதனால் எதிரே கனரக வாகனங்கள் வரும் போது பைக்கில் செல்வோர் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் நடக்கிறது. சாலை ஓரமாக செல்வோரின் முகம், கண்களை கருவேல முட்கள் குத்தி காயபடுத்துகின்றன. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் கட்டுபாட்டை இழந்து டூவீலர்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. என சாலையை சீரமைத்து, கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை