அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
வார்டு மக்கள் மனுபரமக்குடி: பரமக்குடி நகராட்சி 32 வது வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:பரமக்குடி நகராட்சி 32 வது வார்டில் சி.எஸ்.எம்., போர்டிங் ரோடு, மீனாட்சி நகர் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி குடிநீர் குழாய் இருந்தும் வாரம் ஒரு முறை தண்ணீர் வருகிறது. வாறுகாலில் முறையாக கழிவுகள் அள்ளப்படாமல் ரோடுகளில் கழிவு நீர் தேங்குகிறது. தெருவிளக்குகள் எரிவதில்லை.குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். மேலும் பலமுறை இது குறித்து புகார் தெரிவித்தும், எந்த பலனும் இல்லை என அப்பகுதி மக்கள் கூறினர்.