உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கடற்கரை துாய்மை  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கடற்கரை துாய்மை  விழிப்புணர்வு நிகழ்ச்சி

உச்சிபுளி : சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தை (செப்.,20)முன்னிட்டு ராமநாதபுரம் அருகே புதுமடத்தில் மதுரை காமராஜர் பல்கலையை சேர்ந்தகடலோர ஆராய்ச்சி,கடல்சார் கள ஆய்வு மையம்சார்பில் கடற்கரை துாய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது. புதுமடம் கடற்கரையில் நடந்த துாய்மைப் பணியை மதுரை காமராஜ் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் கண்ணன் துவக்கி வைத்தார். கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை தலைவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் வரவேற்றார். ரப்பர், பாலிதீன், பிளாஸ்டிக் என 152 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. துாய்மைப் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப் பட்டது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லுாரி மாணவர்கள், புதுமடம் சுய உதவிக்குழுவினர், கடல்சார் கள ஆய்வு மையத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி