மேலும் செய்திகள்
இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்
06-Oct-2024
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூடைகளை கியூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர்.மண்டபம் இடையர்வலசையில் நேற்று முன்தினம் இரவு கியூ பிராஞ்ச் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வைகை நகரில் வீடு ஒன்றில் 13 மூடைகள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். மூடைகளை சோதனை செய்த போது 650 கிலோ பீடி இலைகள் இருந்தன. அதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டது விசாரணையில் தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம். கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்த பீடி இலை மூடைகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இலங்கையில் பீடி இலைகள் உற்பத்தி குறைவாக இருப்பதால் அங்கு ஒரு கட்டு பீடி ரூ.300 முதல் 500 வரை விற்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு டன் கணக்கில் பீடி இலைகள் நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
06-Oct-2024