உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரையின்றி அவதி

பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரையின்றி அவதி

திருவாடானை; திருவாடானை பாரதிநகர் பஸ்ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால் வெயிலிலும், மழையிலும்பஸ்சுக்காக நின்று மக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை பாரதிநகர்பஸ்ஸ்டாப்பில் நிழற்கூரை இருந்தது. அது சேதமடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் நிழற்கூரை அமைப்பதற்கான நடவடிக்கை இல்லை. அப்பகுதி குடியிருப்பு மக்களும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் இங்கு வந்து பஸ் ஏறி செல்வார்கள். நிழற்கூரை இல்லாததால் பயணிகள் மரநிழலில் நிற்கின்றனர். கோடை வெயில் கொடூரமாக இருந்து வரும் நிலையில் இங்கு வெயிலில் காய்ந்தபடி நிற்கின்றனர்.பயணிகள் மிகவும் அவதிப்படுவதால் விரைவில் நிழற்கூரை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !