உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாரதியார் நினைவு நாள் விழா போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

பாரதியார் நினைவு நாள் விழா போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் சார்பாக, பாரதிநகர் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் விழா போட்டிகள் வருகிற ஆக., 24ல் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளித் தாளாளர் ஜெகதீஸ்வரன் கூறியதாவது: விழாவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாறுவேடம், பாடல், கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் பள்ளி வளாகத்தில் ஆக.,24ல் காலை 9:00 மணிக்கு நடக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு பள்ளி மற்றும் கல்லுாரியில் இருந்து இரு மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான பெயர் பட்டியலை ஆக., 22க்குள் அனுப்ப வேண்டும். 1 முதல் 5 வகுப்பு முடிய பாரதியார் கவிதைகளில் இடம் பெற்ற பாத்திரங்களில் மாறுவேட போட்டி, 6 முதல் 8 வகுப்பு முடிய பாரதியார் கவிதைகளில் பாடலை இசையுடன் நடித்து பாடுதல், 9 முதல் 10 வகுப்பு முடிய பாருக்குள்ளே நல்ல நாடு அல்லது உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை என்ற தலைப்பிலும், பிளஸ்1, பிளஸ் 2 விற்கு ஜாதி மதங்களைப் பாரோம் அல்லது நாமது தமிழரெனக் கொண்டு என்றும், கல்லுாரி மாணவர்களுக்கு சென்றதினி மீளாது அல்லது பெண் விடுதலை வேண்டும் என்ற தலைப்பில் பங்கேற்க வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் சங்க தலைவர் அப்துல் சலாம், செயலர் டாக்டர் சந்திரசேகரன் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை