உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாரதியார் நினைவு தினம்

பாரதியார் நினைவு தினம்

ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் அண்ணா நகரில் உள்ள நாகா மெட்ரிக் பள்ளியில் பாரதியாரின் 104ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு பள்ளி மாணவர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பள்ளித் தாளாளர் வெண்மதி நாதன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதா, துணை முதல்வர் ரேணுகா, ஆசிரியர்கள் ரேணுகாதேவி, ஜெனிபர் உட்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக திறமை கொண்ட பாரதியாரின் சிறப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பாரதியார் பாடல்கள் மற்றும் கவிதைகள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை நாகா மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை