உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலச்செல்வனுார் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

மேலச்செல்வனுார் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

சாயல்குடி: -: மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் அக்.,2வது வாரத்தில் இருந்து பிப்., மாதம் வரை வாரத்தின் கடைசி இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. சாயல்குடி அருகே மேலச்செல்வனுாரில் 1992ல் உருவாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் 600 எக்டேரில் உள்ளது. இங்கு பருவ நிலை காலத்தை கணக்கிட்டு வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவை இனங்கள் சரணாலயத்திற்கு வருகின்றன. இங்கு நாட்டு கருவேல மரங்கள் காடுகளைப் போல அதிகளவு உள்ளன. பொதுவாக வாலிநோக்கம் கலிமுகத் துவாரம் மற்றும் சுற்றுவட்டார வயல்வெளி பகுதிகளில் இரை தேடும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மேலச்செல்வனுார் சரணாலயத்தில் வந்து தங்களது வாழ்விடங்களை பெருக்கிக் கொள் கின்றன. அதிகளவில் பறவைகளை கவரும் பொருட்டு அங்குள்ள கண்மாயில் மீன் குஞ்சுகளும் விடப்படுகின்றன. நத்தைகொத்தி நாரை, குச்சி கால் நாரை, பிளம்மிங்கோ, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன் நாரை, கரண்டிவாயன் உள்ளிட்ட பல்வேறு கொக்குகளும் பட்டை தலை வாத்து, செங்கால் உள்ளான், ஆர்டிக் டேங்க் உள்ளிட்ட கடற்பறவைகளும் நீர் பறவைகளும் பறவைகள் சரணாலயத்திற்கு வருகின்றன. அக்., இரண்டாவது வாரத்தில் இருந்து பிப்., மாதம் வரை வாரத்தின் கடைசி இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. மன்னார் வளைகுடா கீழக்கரை வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் யுவராமன், சோமு, பிரபு உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை