தேர்த்தங்கல் சரணாலயத்தில் தங்கியிருக்கும் பறவைகள்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஏராளமான வெளி மாநில, வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்ய இங்கு வருகின்றன.குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை போன்றவை அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி செல்லும். இந்த ஆண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து கோடை காலத்திலும் பெரிய கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது.தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போதும் தண்ணீர் உள்ளது. இதனால் மே மாதத்தில் பறவைகள் கூட்டம் காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.