பிறந்த நாள் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் இரட்டையூருணி அகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் நாடார் சமுதாயத்தின் முதல் எம்.எல்.ஏ., பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன் பிறந்த நாள் விழா நடந்தது. அகில இந்திய சத்ரிய நாடார் சங்க தலைவர் ராசவீரமணி தலைமை வகித்தார். சவுந்தரபாண்டியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மாநில துணைத்தலைவர் செல்வம் மரியாதை செலுத்தினார். சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், தனநாயகம், சரவணன், ராகேஷ், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.