ராமநாதபுரம் வரும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட பா.ஜ., முடிவு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலின் போது அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினை கண்டிக்கிறோம். முதல்வர் செப்.,29ல் ராமநாதபுரம் வரும் போது கருப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அளித்தார். குறிப்பாகராமநாதபுரம் மாவட்டத்திற்கென அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்கள் முழுமையாக துார்வாரப்படும் என அறிவித்தார். மீனவர்களுக்கு சிங்காரவேலர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித் தரப்படும். 25 ஆண்டிற்கும் மேல் குடியிருக்கும் குடிசைமாற்று வாரிய வீடுகள் இடித்து புதிதாக கட்டித் தரப்படும். இதுபோன்ற ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என அறிவித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்து விட்டார். எனவே செப்.,29, 30ல் ராமநாதபுரம் வரும் முதல்வருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு மாவட்ட பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிதியில்தான் அரசு மருத்துவக்கல்லுாரி, பரமக்குடி தலைமை மருத்துவமனை, ஏழைகளுக்கு வீடு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.----