ராமநாதபுரத்தில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி ஊர்வலம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் விதமாகதேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சகோதரர் மகன் சலீம் துவக்கி வைத்தார். முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்புராமு, மாவட்டத்தலைவர் முரளிதரன், மாவட்ட பொது செயலாளர்கள் குமார், வக்கீல் சண்முகநாதன், முன்னாள் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் குமரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஊர்வலம் அரண்மனையில் துவங்கி கேணிக்கரை, வண்டிக்கார தெரு, வழியாக மீண்டும் அரண்மனையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் தேசியக்கொடியேந்தி பா.ஜ., நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.