பா.ஜ., ஊர்வலம்
திருவாடானை: திருவாடானை, தொண்டியில் பா.ஜ., சார்பில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த ஆப்பரேஷன் சிந்துார் போரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ஊர்வலம் நடந்தது. பா.ஜ., தொண்டர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பஸ்ஸ்டாண்டை அடைந்தனர். அங்கு பிரதமர் மோடிக்கும், ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து கோஷமிட்டனர்.