உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, வக்கீல் பிரபு, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க., ஆட்சியில் தமிழக இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., ஆட்சியை வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் துாக்கி எறிய வேண்டும் என பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை