உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காட்டில் படகு போக்குவரத்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்

காரங்காட்டில் படகு போக்குவரத்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்

தொண்டி:காற்றின் வேகம் குறைந்ததால் காரங்காட்டில் படகு போக்குவரத்து துவங்கியது. மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.தொண்டி அருகே காரங்காடு சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றிக் காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில்படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சிலநாட்களாக பலத்த காற்று வீசியதால் சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி ஜூன் 16 முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று காற்றின் வேகம்குறைந்ததால் படகுபோக்குவரத்து துவங்கியது.ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம், தொண்டி வரை 77 விசைப்படகுகள், 3200 நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் பலத்த காற்று வீசியதால் அனைத்து மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காற்றின் வேகம் தணிந்ததால் மீன்வளத்துறை சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 63 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் மீன்விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் அசைவ பிரியர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ