உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உருக்குலைந்து கிடக்கும் படகுகள்: ராமேஸ்வரம் மீனவர் வேதனை

உருக்குலைந்து கிடக்கும் படகுகள்: ராமேஸ்வரம் மீனவர் வேதனை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடப்பதைக் கண்டு மீனவர்கள் வேதனை யடைந்தனர். 2018 முதல் 2023 வரை ராமேஸ்வரம் மீனவர்களின் 12 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இப்படகுகளை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பல கட்டமாக நடந்த வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் விடுவித்தது. ரூ. 4 கோடி மதிப்புள்ள இப்படகுகளை தமிழகம் கொண்டு வரவும், படகுகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசின் அனுமதியுடன் நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு படகில் 14 மீனவர்கள் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு சென்றனர். கடற்கரையில் 12 படகுகளும் உருக்குலைந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். மரப்பலகைகள் சேதமடைந்தும், இன்ஜின்கள் பராமரிப்பின்றி முடங்கிப் போனதால் பழைய இரும்புக்கு போடும் நிலையில் இருந்தது. படகுகளை பார்வையிட ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதித்தனர். இப்படகுகளை மீட்டு வரவும், படகில் பழுது நீக்கி மீண்டும் இயக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா வேதனை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ