உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் விடுதிக்கு வெடி குண்டு மிரட்டல்

ராமேஸ்வரத்தில் விடுதிக்கு வெடி குண்டு மிரட்டல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தனியார் தங்கு விடுதிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தினமும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் தங்குகின்றனர். நேற்று இந்த விடுதியின் இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து ராமேஸ்வரம் டவுன் போலீசார் விடுதியில் சோதனையிட்ட போது அது புரளி என தெரிய வந்தது. ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் போலி முகவரியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. அதனால் விடுதியில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை