உள்ளூர் செய்திகள்

 நுால் அறிமுக விழா

கமுதி: -கமுதி அருகே பசும்பொன் மார்னிங் ஸ்டார் கலை- அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர் சங்கம் கமுதி கிளை சார்பில் நுால் அறிமுக விழா நடந்தது. கிளைத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.முதல்வர் அமலி முன்னிலை வகித்தார். செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். நானும் இல்லாத நான் மற்றும் பூவுக்குள் ஒரு போர்க்களம் என்னும் நுாலை மாவட்ட தலைவர் வான்தமிழ் இளம்பரிதி, மாவட்ட பொருளாளர் ரேணுகாதேவி வெளியிட கல்லுாரி நிறுவனர் அல்போன்ஸ் பாத்திமா மற்றும் செயலர் ரிஸ்வானா பாத்திமா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர்கள், மாணவிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை