உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காதலி இறந்ததால் காதலன் தற்கொலை

காதலி இறந்ததால் காதலன் தற்கொலை

முதுகுளத்துார்:காதலி தற்கொலை செய்ததால் விரக்தியில் காதலனும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே ஆதனகுறிச்சியை சேர்ந்த பெருமாள் மகன் கவிநாத் 21. டிரைவராக வேலை செய்தார். முதுகுளத்துார் அருகே கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு அந்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.விரக்தியில் இருந்த கவிநாத் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்தார். முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கவிநாத் இறந்துவிட்டதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை