மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருவாடானை:விபத்தில் மூளைச்சாவு அடைந்து இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கற்காத்தகுடியை சேர்ந்தவர் இக்னேசியஸ்ராஜ் 44. காரைக்குடி அரசு போக்குவரத்து அலுவலகத்தில் வேலை பார்த்தார். இரு நாட்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே டூவீலரில் சென்ற போது வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.மதுரை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் முன்வந்தனர்.இக்னேசியஸ் ராஜின் இரண்டு கண்கள், இதய வால்வுகள், சிறுநீரகங்கள், கல்லீரல் அதே மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.அவரது உடல் கற்காத்தகுடிக்கு கொண்டு வரப்பட்டது. ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், தாசில்தார் அமர்நாத், ஊராட்சி தலைவர் சங்கீதா மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.