உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / படகில் அதிக வெளிச்சம் தரக்கூடிய லைட்கள் பறிமுதல்

படகில் அதிக வெளிச்சம் தரக்கூடிய லைட்கள் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம்: மீன்வள மேற்பார்வையாளர்கள் மற்றும் கடல் அமலாக்க பிரிவு காவலர்கள் ஆற்றங்கரை முதல் முடிவீரபட்டினம் கடற்கரை வரை ரோந்து பணியின் போது, தடையை மீறி படகில் பயன்படுத்திய அதிக வெளிச்சம் தரக்கூடிய லைட்களை பறிமுதல் செய்தனர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் படகில் அதிக ஒளி தரக்கூடிய லைட்களை பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால், எதிர்வரும் படகுகளும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, மீனவர்கள் தங்களது படகில் அதிக வெளிச்சம் தரக்கூடிய லைட்களை பயன்படுத்த மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். மீன்வள மேற்பார்வையாளர்கள் மற்றும் கடல் அமலாக்க பிரிவு காவலர்கள், சாகர் மித்ரா பணியாளர்களுடன் ஆற்றங்கரை முதல் முடிவீரபட்டினம் கடற்கரை வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் படகில் அதிக வெளிச்சம் தரக்கூடிய 14 லைட்கள் மற்றும் 3 ஜெனரேட்டர் களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி