உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தப்படும் பழுதான கார்கள்

கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தப்படும் பழுதான கார்கள்

கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை விரிக்கின்றனர். தனக்குரிய இடத்தை காட்டிலும் கூடுதலாக பொது இடத்தை ஆக்கிரமித்து பழுதான கார்கள் மற்றும் விற்பனை பொருள்களை காட்சிப்படுத்தி வைப்பதால் கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது இட நெருக்கடியால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வரை சாலையோரங்களை ஆக்கிரமித்து திறந்தவெளி ஓட்டல்கள், இரும்பு கடைகளில் பொருட்கள், பழுதான கார்கள் மற்றும் டூவீலர்களை வரிசையாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் சாலையோரங்களை ஆக்கிரமித்து இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை