உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுரையீரல் புற்றுநோய் தொற்று கண்டறிய பிராங்கோஸ்கோபி இயந்திரம் துவக்கி வைப்பு

நுரையீரல் புற்றுநோய் தொற்று கண்டறிய பிராங்கோஸ்கோபி இயந்திரம் துவக்கி வைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நுரையீரல் தொடர்பான நோய்களை கண்டறியவும். மூச்சுக்குழாய்களில் அடைப்பை நீக்கவும், நாணயம் போன்றவைகளை விழுங்கினால் எடுக்கவும் பிராங்கோஸ்கோபி சேவை துவக்கப்பட்டது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிராங்கோஸ்கோபி சேவை துவக்க விழா நடந்தது. டீன் அமுதாராணி தலைமை வகித்தார். நுரையீரல் சிறப்பு நிபுணர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். டாக்டர்கள் யாசர் அராபத், கிேஷார் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.ரூ.17 லட்சம் மதிப்புள்ள பிராங்கோஸ்கோப்பியை காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். டீன் அமுதாராணி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மட்டுமே இந்த பிராங்கோஸ்கோபி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இல்லை. இது நுரையீரல் தொற்று, புற்றுநோய், கட்டிகள் போன்றவற்றை கண்டறியவும், மூச்சுக்குழாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றவும் பயன்படுகிறது. இதுவரை இது போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவது சிரமமாக இருந்தது. தற்போது அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இந்த சேவை வழங்கப்படுவதால் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை