மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
07-May-2025
சாயல்குடி: சாயல்குடி அருகே டி.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், முத்து இருளப்பசுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.நடுமாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 19 மாட்டு வண்டி வீரர்கள் பங்கேற்றனர். மாட்டுவண்டி பந்தயத்தை காண்பதற்காக ஏராளமான கிராம மக்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்டு இருந்தனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பரிசும், வண்டி ஓட்டிய சாரதிக்கு நினைவு பரிசும் வழங்கி பாராட்டப்பட்டது.
07-May-2025