மாட்டுவண்டி பந்தயம்
திருவாடானை: திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிங்கமுக காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சிறிய மாடு, பெரிய மாடு என இரண்டு வகையான போட்டி நடந்தது. ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.