மேலும் செய்திகள்
பார்க்க புதுசு; உள்ளே எல்லாமே பழசு!
10-Apr-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணி ஓராண்டிற்கு மேலாக ஆமை வேகத்தில் நடப்பதால் தற்போது குறைந்த இடவசதியுள்ள பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர்களுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டது. கட்டடம் பழுது, போதிய இடவசதியின்மை காரணமாக 2023 ஆக.,3 ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16,909 சதுர அடியில் கட்டுமான பணிகள் நடக்கிறது.அப்போது பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியம் இடத்தில் அமைக்க முடிவு செய்தனர். ஆனால் வீட்டுவசதி வாரியம் இடம் தராததால் தற்போது பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.இட நெருக்கடியால் கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன. குடிநீர், கழிப்பறை போதுமான அளவில் இல்லை. பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் பயணிகள் பஸ் ஏறி, இறங்க சிரமப்படுகின்றனர். எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
10-Apr-2025