உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதர் அடந்த அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம்

புதர் அடந்த அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம்

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் முழுவதும் புதர் அடர்ந்துள்ளதால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. நயினார்கோவில், சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர் மண்டியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தினம்தோறும் விளையாட்டு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தடகளம் உள்ளிட்ட எந்த ஒரு பயிற்சி மேற்கொள்ள வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். படிப்புடன் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் மாநில, மத்திய அரசுகளால் நடத்தப்படுகிறது. உயர்கல்வி மற்றும் பணியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே பள்ளி அளவிலான விளையாட்டுகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனைத்து அரசு பள்ளி மைதானங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் உள்ள பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.அதற்கு நயினார்கோவில் உள்ளிட்ட பள்ளி மைதானங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !