போதை தடுப்பு விழிப்புணர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்குவிண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் தேசிய செயல் திட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பின் கீழ் நாஷா முக்த் பாரத் அபியான் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு செய்தல் திட்டம் செயல்படுத்த ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் மக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு செய்தல், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலை வளாகம், பள்ளி ஆகியவற்றில் போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், இளைஞர்கள், இளம் பருவத்தினருக்கு ஏற்படுத்துதல்.பெரியவர்களை தாக்கும் போதைப் பொருள்கள் பயன்பாட்டை தடுத்தல், சமூகத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.தகுதி வாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை மே 16 மாலை 5:00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்றம் தென்புறம், ராமநாதபுரம் 623 504 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.