உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்கள் தற்காப்பு கலை  பயிற்சியாளர்களுக்கு அழைப்பு

பெண்கள் தற்காப்பு கலை  பயிற்சியாளர்களுக்கு அழைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண்களுக்கு தற்காப்புக்கலை கற்றுத்தரும் பயிற்சியாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க ஒரு பயிற்சியாளருக்கு மாதம் ரூ.9000 எனவும், விளையாட்டு பயிற்சியாளருக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.ஓராண்டு காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் தகுதியான பெண் தற்காப்பு கலை பயிற்சியாளர்,விளையாட்டு பயிற்சியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூன் 13 மாலை 5:00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்றம் தென் புறம், ராமநாதபுரம்- 623504 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தெரிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !