மேலும் செய்திகள்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
07-Nov-2025
ராமநாதபுரம்: சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நவ.,18 ல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருண் தலைமையில் ஆய்வு, கருத்துகேட்பு கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அச்சமுதாய மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தங்களது குறைகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
07-Nov-2025