உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆற்றாங்கரை கிராமத்தில் உழவரைத் தேடி முகாம்

ஆற்றாங்கரை கிராமத்தில் உழவரைத் தேடி முகாம்

உச்சிபுளி; மண்டபம் வட்டாரத்தில் ஆற்றாங்கரை கிராமத்தில்உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட சிறப்பு முகாம் நடந்தது. மீன்வளத்துறை மேம்பாடு திட்டம் மேற்பார்வையாளர் முருகேசன் கூண்டு மீன் வளர்ப்பு, மீன்பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்தும், ராமநாதபுரம் விதைச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி விதைப்பண்ணை அமைத்தல், உயிர்ம சான்று பெறுவது குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். உச்சிபுளியில் நடந்த முகாமில் வட்டார வேளாண் அலுவலர் மோனிஷா மண்மாதிரி சேகரம் செய்வதின் அவசியம், நெல் சாகுபடிக்கு பின் 2ம் போக சாகுபடியாக பயறு வகைப்பயிர்கள் குறித்தும், ஜூலை 31க்குள் மத்திய அரசின் விவசாய அடையாள அட்டை பதிவு செய்ய வலியுறுத்தி பேசினார். நிலப்போர்வை அமைப்பது சிறிது நாட்களில் மட்கி உரமாவது குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதி செயல்முறை விளக்கமளித்தார். விவசாயிகளுக்கு திரவ உயிர் உரம், நுண்ணுாட்டகலவை உரங்கள் வழங்கப்பட்டது. வேளாண் அலுவலர்கள் கஸ்துாரி, பவித்ரா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை