உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நரிப்பையூரில் உழவரை தேடி முகாம்

நரிப்பையூரில் உழவரை தேடி முகாம்

கடலாடி:மாறிவரும் கால சூழ்நிலைகள் மற்றும் பருவநிலைக்கு ஏற்ப விவசாயிகள் தயார் செய்வதற்கும் விவசாயத்தில் ஏற்படும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேளாண் துறை அலுவலர்களை ஒன்றிணைத்து உழவரைத் தேடி வேளாண்மை என்ற தலைப்பில் முகாம் நடந்து வருகிறது.சாயல்குடி அருகே நரிப்பையூரில் நடந்த முகாமிற்கு மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ராஜேந்திரன் தலைமை வகித்து திட்டத்தின் நன்மைகள் மற்றும் மண்வள பாதுகாப்பு உரங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.கடலாடி வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமாரவேல் வரவேற்றார். வேளாண் உதவி அலுவலர் தவமுருகன், கோடை உழவு பற்றியும் நுண்ணுாட்ட கலவைகளின் பயன்பாடு பற்றியும் விளக்கி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி