அரிசிக்கு ஜி.எஸ்.டி., கண்டித்து ராமேஸ்வரத்தில் பிரசாரம்
ராமேஸ்வரம்: அரிசி, கோதுமைக்கு ஜி.எஸ்.டி., வரி விதித்த மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர்நடைபயண பிரசாரம் செய்தனர்.ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என ஒற்றை தலைமையை உருவாக்கவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில் அதற்கேற்ப பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைக்கவில்லை. அரிசி, கோதுமைக்கு ஜி.எஸ்.டி., வரி விதித்த மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் நடைபயண பிரசாரம் செய்தனர்.இதில் ராமேஸ்வரம் தாலுகா செயலாளர் சிவா, நிர்வாகிகள் கருணாகரன், ஜஸ்டின், அசோக், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.