உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாய்க்கால் ஆக்கிரமிப்பு: அகற்ற மனு

வாய்க்கால் ஆக்கிரமிப்பு: அகற்ற மனு

ராமநாதபுரம் : கீழக்கரை தாலுகா பனையடியேந்தலில் இதம்பாடல் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வாய்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். தரமற்ற பணி செய்த ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தியுள்ளது.பனையடியேந்தல் கிளைச் செயலாளர் காயாம்பு தலைமையில் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், கீழக்கரை செயலாளர் முருகேசன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் பனையடியேந்தல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் 4 ஆண்டுகளில் மிகவும் சேதமடைந்துள்ளது. எனவே கட்டடத்தின் உறுதித்தன்மையை பரிசோதனை செய்து, தரமற்றப்பணிக்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பனையடியேந்தல் கிராமத்தில் இருந்து இதம்பாடல் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் 50 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பது இல்லை.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பள்ளி கட்டடத்தை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை