உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடையை மீறி மீன்பிடிப்பு 11 மீனவர்கள் மீது வழக்கு

தடையை மீறி மீன்பிடிப்பு 11 மீனவர்கள் மீது வழக்கு

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடையை மீறி கரையோரம் மீன்பிடித்த 11 விசைப்படகு மீனவர்கள் மீது மீன்வளத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசைப்படகுகளில் மீனவர்கள் கடற்கரையிலிருந்து 5 நாட்டிகல் துாரத்திற்குள் மீன்பிடிக்கக் கூடாது. அதையும் மீறி சிலர் அவ்வாறு மீன் பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்கள் நல கூட்டத்தின் போது இதுதொடர்பாக அதிகாரியிடம் புகார் செய்தனர். இதனிடையே நேற்று தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் மற்றும் அலுவலர்கள் ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை கடலுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 11 விசைப்படகுகள் தொண்டி கடல் பகுதியில் 3 நாட்டிகல் தொலைவில் மீன்பிடிப்பது தெரிந்தது. இதில் லாஞ்சியடி மற்றும் சோலியக்குடியை சேர்ந்த 11 விசைப் படகு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த படகு உரிமையாளர்ளுக்கு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி அரசின் நலத்திட்ட உதவிகளை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !