உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உதவித்தொகை வழங்கும் வங்கி கமிஷன் தொகை ரூ.13.60 லட்சம் கையாடல்: கணவர், மனைவி உட்பட 3 பேர் மீது வழக்கு

உதவித்தொகை வழங்கும் வங்கி கமிஷன் தொகை ரூ.13.60 லட்சம் கையாடல்: கணவர், மனைவி உட்பட 3 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான வங்கிகளின் சேவைக்கட்டணத்தை கையாடல் செய்ததாக தற்காலிக பணியாளர், அவரது மனைவி, மைத்துனர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இம்மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் கடலாடியில் ரூ. 60.97 லட்சம் கையாடல் செய்யப்பட்டதை கண்டறிந்து இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, ஒருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகா சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது.2023 பிப்., முதல் ஜூலை 24 வரை முதியோர், விதவை உதவித்தொகை போன்றவை பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு கருவூலம் மூலம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.30 வீதம் வங்கிகளுக்கு கமிஷன் தொகையை அரசு வழங்கி வந்தது. வங்கிக்கு வழங்கப்படும் தொகை குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன் ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகள் பட்டியலை தயார் செய்யும் பணியில் இருந்த தற்காலிக பணியாளர் திருவாடானை பிடாரியம்மன் கோயில் தெரு சந்திரன் மகன் கார்த்திக்ராஜா வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை தன் மனைவி காயத்ரி, மைத்துனர் செல்லப்பாண்டி கணக்குகளில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரத்து 380 வரவு வைத்திருந்தது தெரிய வந்தது.தாசில்தார் கணேசன் புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ராஜா, காயத்ரி, செல்லப்பாண்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி