உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டாஸ்மாக்கில் முதல்வர் படம்  பா.ஜ., நிர்வாகிகள் மீது ஜாமினில் வர முடியாத பிரிவில் வழக்கு

டாஸ்மாக்கில் முதல்வர் படம்  பா.ஜ., நிர்வாகிகள் மீது ஜாமினில் வர முடியாத பிரிவில் வழக்கு

ராமநாதபுரம்:டாஸ்மாக் மதுக்கடையில் முதல்வர் போட்டோவை ஒட்டிய பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவி உட்பட 3 பேர் மீது ஜாமினில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் தான் என ராமநாதபுரம் காட்டூரணியில் உள்ள டாஸ்மாக் கடை சுவற்றில் முதல்வர் படத்தை பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலாராணி, நிர்வாகிகளுடன் சென்று ஒட்டினார். இது தொடர்பாக டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராமநாதபுரம் மேலக்கோட்டை பாலமுருகன், அவரை கடையில் பணி செய்யவிடாமல் தடுத்தும், தாக்கி கீழே தள்ளிவிட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் கலாராணி, குமார், சக்கரவர்த்தி ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி